செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகினால் அவருக்கு இருக்கும் 5 வாய்ப்புகள்!
ADMK Sengotaiyan TVK DMK BJP
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் அதிமுகவிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து திறந்த மனதுடன் பேசப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஒருவேளை செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகினால் அவருக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
வாய்ப்பு 1: செங்கோட்டையன் திமுகவில் சேர வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எம்.ஜி.ஆர் காலம் முதல் அதிமுகவில் செயல்பட்ட அவரைவிட ஜூனியரான (செந்தில்பாலாஜி) ஒருவரின் கீழ் செயல்பட வேண்டிய சூழல் செங்கோட்டையனுக்கு சிரமமாக இருக்கும்.
வாய்ப்பு 2: பாஜகவில் சேரும் சாத்தியமும் அதிகம் இல்லை. முன்பு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தாலும், அதிமுக–பாஜக கூட்டணி உறுதியான பின் அவருக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்தது. கூட்டணி நிலவுகின்ற சூழலில் அவர் பாஜகவில் இணைவது கடினம்.
வாய்ப்பு 3: தனிக்கட்சி தொடங்குவது பற்றியும் சாத்தியம் குறைவே.
வாய்ப்பு 4: திமுக, அதிமுக போன்ற வலுவான கட்சிகளுடன் போட்டியிடுவதில் வெற்றி பெறுவது சிரமமாக இருக்கும்.
வாய்ப்பு 5: செங்கோட்டையனுக்கு நெருக்கமான வாய்ப்பு தமிழக வெற்றிக்கழகமே. நடிகர் விஜய் தொடங்கிய இக்கட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலின் மூலம் அதன் பலம் வெளிப்படும். கொங்கு மண்டல அடிப்படையைக் கொண்ட செங்கோட்டையன், த.வெ.க.வில் இணைந்து அப்பகுதியின் முக்கிய முகமாக உருவாகலாம்.
ஆனால், தனது நீண்டகால அனுபவத்துடன் இருக்கும் செங்கோட்டையன், அரசியலுக்குள் புதியதாக நுழைந்த விஜயை தலைவராக ஏற்றுக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனினும், செங்கோட்டையனின் இறுதி முடிவு செப்டம்பர் 5ஆம் தேதி வெளிப்படும்.
English Summary
ADMK Sengotaiyan TVK DMK BJP