தர்மஸ்தலா அவதூறு வழக்கு: தொண்டு நிறுவனத்திற்கு வந்த வெளிநாட்டு பணம்: அமலாக்கத்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


கர்நாடகா தர்மஸ்தலா புதைகுழி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உள் நுழைந்துள்ளது. தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பியோருக்கு, வெளிநாடுகளில் இருந்து பணம் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, தற்போது விசாரணையை தொடங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து பெண்கள் கொள்ளப்பட்டு புதைக்கப்பட்டதாக செய்தி வெளியாகி நாட்டை உலுக்கியது. அதிலுள்ள 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொள்ளப்பட்டு உடல்களை புதைத்ததாக மஞ்சுநாதா கோவில் முன்னாள் ஊழியர் சின்னையா பொய் புகார் அளித்ததன் பேரில் கைது செய்யப்பட்டார். 

அத்துடன், பெங்களூரில் வசிக்கும் பல்லாரியை சேர்ந்த, 'யு - டியூபர்' சமீர் தனது, யு - டியூப் பக்கத்தில், தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையில் பெண்கள் உடல்கள் கிடப்பது போன்று, ஏ.ஐ., தொழில்நுட்ப புகைப்படத்தை வெளியிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எஸ்.டி.பி.ஐ., அமைப்பும், தர்மஸ்தலா வழக்கில் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தியது.

இதனையடுத்து, நேத்ராவதி ஆற்றங்கரையில், 17 இடங்களில் தோண்டியும் எலும்பு கூடுகள் எதுவும் கிடைக்கவில்லை. தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பப்படுவதாக பா.ஜ., வெகுண்டெழுந்தது.  அத்துடன், உடுப்பி - சிக்கமகளூரு தொகுதி பா.ஜ., - எம்.பி., கோட்டா சீனிவாஸ் பூஜாரி, மத்திய உள்துறை அமைச்சர் இது குறித்து அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிநார். அதில்,  'தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்புவோருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது பற்றி, அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.

மைசூரின் ஒடநாடி, சம்வாட் ஆகிய இரு தொண்டு நிறுவனங்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்த பணம், என்ன காரணத்திற்காக வந்தது என்பது பற்றிய தகவல்களை வழங்கும்படி சில வங்கிகளுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.

குறித்த தொண்டு நிறுவனங்கள் மூலமே தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பியோருக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி, தொண்டு நிறுவனங்களின் பண பரிவர்த்தனை விபரங்களை வங்கிகளிடம் அமலாக்கள் துறை கேட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்தது தெரியவந்தால், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Directorate investigates foreign money received by charity in connection with Dharmasthala defamation case


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->