இந்தாண்டு நவம்பருக்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை..! - Seithipunal
Seithipunal


இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம்கை யெழுத்தாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இருநாடுகளுக்கிடையே இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிண்ட நிலையில், இது வரை 05 சுற்று பேச்சுகள் நடந்த நிலையில், முடிவு எடுக்கப்படவில்லை.

குறிப்பாக பால் பண்ணைத் துறைதான் இந்தியாவுடனான பேச்சில் இழுபறியாக இருக்கிறது. ஏனெனில், வேளாண்மை மற்றும் கால்நடைத் துறைகளில் அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையை திறப்பதில் இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்ததால் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 06-வது சுற்று பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டில்லியில் வர்த்தக சேம்பர் நடத்திய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா- அமெரிக்கா இடையில் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் புவிசார் அரசியல் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார். அத்துடன், இவை அனைத்தும் சரியாக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாட்டு தலைவர்களும் பிப்ரவரியில் முடிவு செய்தபடி இரண்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் வரும் நவம்பர் மாதம் அல்லது அதற்கு முன்னர் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கைவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், உலகின் பல நாடுகளுடன் இந்தியா வர்த்தக உறவை விரிவுபடுத்தி வருகிறது வேண்டும், அதன்படி, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரிஷியஸ், பிரிட்டன், மற்றும் நான்கு ஐரோப்பிய நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகியு ள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்கா உடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister Piyush Goyal is confident that a trade agreement with the United States will be signed by November this year


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->