NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு
NDA BJP C P Radhakrishnan
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சிபி இராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முடிவு
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
திருப்பூரில் 1957 அக்டோபர் 20 ஆம் தேதி பிறந்த ராதாகிருஷ்ணன், 1998 ஆம் ஆண்டு கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தில் பாஜக வேரூன்றுவதற்காக tireless முயற்சியாற்றியவர். கட்சிக்குள் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
ஆளுநர் பதவி
அவரது அரசியல் வாழ்க்கையில் ஆளுநர் பதவிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2023 பிப்ரவரி முதல் 2024 ஜூலை வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பணியாற்றினார். இதற்கிடையில் 2024 மார்ச் முதல் ஜூலை வரை தெலங்கானா ஆளுநராகவும், அதே நேரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார். 2024 ஜூலை 31 முதல் மகாராஷ்டிர ஆளுநராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்
அவரை துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருப்பது, தமிழகம் சார்ந்தவர்களுக்கு பெருமை எனவும், பாஜக அரசியல் ரீதியாக வலுவான சைகையை வழங்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
English Summary
NDA BJP C P Radhakrishnan