சிறுவனின் மூச்சுக் குழாயில் ஆணியா !!! நவீன முறையில் அகற்றி சாதனை....! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள வள்ளியூரைச் சேர்ந்தவர்கள் மைதீன் மாற்றும் தகாபீவி. இவர்களது, முகமது ஆரிப் என்ற 8 வயதான மகன், எப்போதும் போல விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 5 சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான ஆணியை விழுங்கி விட்டான். இதையடுத்து மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 

சிறுவனின் ஆபத்தான நிலை:

உடனடியாகச் சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த மருத்துவர் டீன் ரேவதி பாலன் உடனடியாகச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

ஆணி:

இதையடுத்து மருத்துவர் பாலசுப்ரமணியன் கண்காணிப்பில், காது,மூக்கு, தொண்டைப் பிரிவு துறைத் தலைவர் ரவிக்குமார் தலைமையில் சிகிச்சை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 30 நிமிடத்தில் சிறுவனின் மூச்சு குழாயில் சிக்கியிருந்த ஆணியை அகற்றி உயிரைக் காப்பாற்றிச் சாதனை படைத்தனர். 

சாதனை:

இந்தச் சாதனை குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சிறுவனின் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சிறுவனின் உயிரைக் காப்பாற்றியதால் தாய் தாகா பீவி, மருத்துவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nail in boys lung pipe achieved by removing using modern method


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->