அதிமுகவின் 5 எம்.எல்.ஏ-க்கள் எங்கே? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் ‘இடியாப்பச் சிக்கல்’ தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மையை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய நகர்வுகள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் வரவு குறித்த தகவல்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

வாழ்த்துச் செய்தியின் பின்னணி என்ன?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது முடிவை மாலை 4 மணிக்கு அறிவிப்பதாகத் தெரிவித்த சில நிமிடங்களிலேயே, எடப்பாடி பழனிசாமி (EPS) "அமையவிருக்கும் புதிய ஆட்சிக்கு வாழ்த்துகள்" என ஒரு பதிவை வெளியிட்டார். ஆளுநர் யாரையும் அழைக்காத நிலையில், ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவு அவசரமாக வாழ்த்துத் தெரிவித்தது ஏன்? விசிக தவெக-விற்கு ஆதரவு அளிப்பது உறுதி என்ற தகவல் முன்கூட்டியே அவருக்குக் கிடைத்துவிட்டதா? அல்லது இது ஏதேனும் அரசியல் பின்வாங்கல் யுக்தியா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

மாயமான 5 எம்.எல்.ஏ-க்கள்?

இன்று காலை சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 பேரில் 42 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ள 5 எம்.எல்.ஏ-க்கள் எங்கே போனார்கள் என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக். அவர்கள் தவெக முகாமுக்கு ஆதரவு அளிக்கச் சென்றுவிட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் வரவில்லையா என்பது குறித்து அதிமுக தலைமை மௌனம் காக்கிறது. இந்த 'மிஸ்ஸிங்' விவகாரம், அதிமுகவின் கோட்டைக்குள்ளேயே ஏதேனும் விரிசல் விழுந்துள்ளதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

திமுக - அதிமுக ரகசிய உறவா?

மற்றொரு அதிரடித் தகவலாக, தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க அதிமுக தலைமையிலான ஆட்சிக்கு திமுக ஆதரவு அளிக்கக்கூடும் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் கசிந்தன. இருப்பினும், திமுகவின் மூத்த தலைவர்கள் இத்தகைய ‘பரம்பரை எதிரி’ உடன்பாட்டிற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், அதிமுகவின் சி.வி. சண்முகம் தவெக தரப்பைச் சந்திக்க உள்ளதாக வெளியாகும் உறுதி செய்யப்படாத தகவல்கள், திரைக்குப் பின்னால் ஏதோ ஒரு பெரிய பேரமோ அல்லது சமரசமோ நடந்து கொண்டிருப்பதை உணர்த்துகிறது.

மாலை 4 மணி அறிவிப்பு ஒருபுறம் இருக்க, அதிமுகவின் இந்த உள்விவகாரங்களும், எடப்பாடியின் மர்மமான வாழ்த்தும் தமிழக அரசியலை ஒரு புரியாத புதிராக மாற்றியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mystery Over EPS Sudden Greeting Where are the 5 AIADMK MLAs The Political Knot Tightens


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->