நாகப்பட்டினம் || பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.! போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ஆய்மழை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சந்திரகலா. இந்நிலையில் சம்பவத்தன்று திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்ற சந்திரகலா உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

இந்நிலையில், இவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை, 50,000 ரூபாய் மதிப்புள்ள வைரத்தோடு மற்றும் 1500 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதையடுத்து இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து சந்திரகலாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக சந்திரகலா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சந்திரகலா வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பூட்டிய வீட்டில் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mysterious persons who stole jewelry and money from a locked house in nagapattinam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->