ராஜபாளையம் கோயில் வளாகத்தில் வைத்தே இரு காவலர்கள் வெட்டிப் படுகொலை!
murdered rajapalayam temple crime
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுப் பணியில் இருந்த இரு காவலர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலர்கள் பேச்சிமுத்து (வயது 50), சங்கர பாண்டியன் (வயது 65) இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், கோயிலின் உண்டியலும் உடைக்கப்பட்டு சேதமடைந்திருந்தது கண்டறியப்பட்டது.
திருட முயற்சி நடந்தபோது, உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்றதால் ஆத்திரமடைந்த கொள்ளையர்களால் காவலர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ராஜபாளையம் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
murdered rajapalayam temple crime