இலாகா மாற்றத்தில் ஆளுநர் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை - வைகோ கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


இலாகா மாற்றத்தில் ஆளுநர் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை - வைகோ கண்டனம்.!!

தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால், அவர் வகித்து வரும் துறையை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிட முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், இந்த இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதலமைச்சரின் அதிகாரமாகும் என்று வைகோ தெரிவித்துள்ளார். 

இதுகு தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கைது செயற்பட்டு இருப்பதாலும், உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் வகித்து வரும் துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பி உள்ளார்.

அதன் படி மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களுக்கும் மாற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக  முதலமைச்சர் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். 

அரசியல் சட்டப்பிரிவு 163-ன் படி, முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் கடமையாற்ற வேண்டும். அதேபோல், மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதலமைச்சரின் அதிகாரமாகும். ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை.

அரசியல் சட்ட மரபுகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். முதலமைச்சர் மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினால் உடனே அதனை ஏற்று அமைச்சர்களுக்கு துறைகளை பகிர்ந்து அளிக்க ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்." என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mtmk general secaretary vaiko condems for department change in tn govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->