ஷ்ரேயங்கா பாட்டிலின் 'ஆஃப் பிரேக்' பந்தில் பஞ்சரான குஜராத் அணி; 'ஹாட்ரிக்' வெற்றிப் பெற்ற பெங்களூரு அணி..!
The Bengaluru team secured a hat trick of victories by defeating the Gujarat team
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 9-வது லீக் ஆட்டம் இன்று நபி மும்பையில் நடைபெற்றது. இதில், பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 07 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.
தொடக்கத்தில் களமிறங்கிய அணியின் கேப்டன் மந்தனா 05 ரங்களில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆர்.சி.பி அணியின், ராதா யாதவ் அபாரமாக ஆடி 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் சோபி டிவைன் 03 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில், தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

இறுதியில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது. பெங்களுரு அணியின் ஷ்ரேயங்கா பாட்டீல் 05 விக்கெட்டும், லாரன் பெல் 03 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். இந்த படி, புள்ளி பட்டியலில் தொடர் வெற்றிகளை பெற்று ஆர்.சி.பி. முதலிடத்திலும், 02 போட்டிகளில் வெற்றிப்பெற்று மும்பை அணி 02 வைத்து இடத்தில் உள்ளது.
நாளை மும்பை- உ.பி அணிகளுக்கு இடையிலும், டெல்லி - சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
English Summary
The Bengaluru team secured a hat trick of victories by defeating the Gujarat team