மாஞ்சா நூல் பட்டத்தால் வந்த வினை; நூல் கழுத்தை அறுத்து 08 வயது சிறுவன் பலி..!
A boy died after his neck was slit by a kite string coated with glass powder
குஜராத்தில் நேற்று மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது பட்டம் விடுவது வழக்கமாகும். அவ்வாறு விடப்பட்ட பட்டத்தில் இருந்து மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 08 வயது சிறுவன் ஒருவர் உரியிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் ஜஹாங்கீராபாத் பகுதியை சேர்ந்தவர் அமோல் போர்சியின் மகன் ரஹனேஷ்க்கு வயது 08. குறித்த சிறுவன் இன்று தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சைக்கிளில் சென்றுள்ளான். அப்போது, அப்பகுதியில் பறந்த பட்டத்தில் உள்ள மாஞ்சா நூல் சிறுவன் ரஹனேஷின் கழுத்தை அறுத்துள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக, சிறுவனை மீட்ட அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜஹாங்கீராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A boy died after his neck was slit by a kite string coated with glass powder