'சாவா' பட இசை குறித்த சர்ச்சை; விமர்சனங்கள் கலைஞனை செதுக்கும்; ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்..!
AR Rahman clarifies the controversy surrounding the music of the film Chhava
மராட்டிய மன்னர் சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'சாவா' (Chhava). இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த திரைப்படத்தின் இசை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசை அமைக்கும் போது, அந்த காலகட்டத்தின் ஆன்மாவை சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நான் எப்போதும் புதிய Experiments-ஐ விரும்புபவன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியுள்ளேன் என்று ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விமர்சனங்கள் எப்போதும் வரும். அவை கலைஞனை செதுக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 'சாவா' பிரிவினையை பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தை காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 'இப்படத்திற்கு நான் ஏன் தேவை?' என இயக்குநரிடம் கேட்டேன். 'நீங்கள் மட்டும்தான் இப்படத்திற்கு தேவை' என பதிலளித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இப்போது சிலர் '90ஸ் காலத்தில் ரோஜா மாதிரி நல்ல இசை கொடுத்தீர்கள் என்று சொல்கிறார்கள். அதை கேட்கும் போது, இப்பொழுது நான் நல்ல இசையை தரவில்லையா? என்ற எண்ணம் உருவாகிறது என்று தெரிவித்துள்ளார். அது மனதளவில் பாதிப்பை உண்டாக்குகிறது என்றும், கடந்த 06 ஆண்டுகளில் மட்டும் 20–30 படங்களுக்கு இசை அமைத்திருக்கேன். இப்போது எனக்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. என்று இசைப்புயல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
English Summary
AR Rahman clarifies the controversy surrounding the music of the film Chhava