தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜனவரி 19 இல்..! - Seithipunal
Seithipunal


தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், வரும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுடனான உறவு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும், மாநிலம் தழுவிய அளவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் நிலவும் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறுவதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Congress Committee Executive and General Council meeting on January 19


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->