பொங்கல் பண்டிகையில் கல்லா கட்டிய மது விற்பனை; தமிழகத்தில் 2 நாட்களில் ரூ. 518 கோடிக்கு விற்பனை..!
During the Pongal festival liquor worth Rs 518 crore was sold in Tamil Nadu in two days
தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 02 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. போகிப்பண்டிகையான 14-ஆம் தேதி ரூ. 217 கோடிக்கும், பொங்கல் பண்டிகை தினமான நேற்று ரூ. 301 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 04 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையானது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 02 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் கடந்த 02 நாட்களில் மட்டும் அதிகபட்சமாக ரூ. 98.75 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
அத்துடன், திருச்சி மண்டலத்தில் ரூ.85.13 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.95.87 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.79.59 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.76.02 கோடியும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. மனமகிழ் மன்றங்களில் கடந்த 14-ந்தேதி ரூ.33.16 கோடிக்கும், 15-ந்தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில், 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
During the Pongal festival liquor worth Rs 518 crore was sold in Tamil Nadu in two days