‘ஜனநாயகன்’ வெளியீட்டைப் பற்றி நடிகர் விஜய்யை விட, முதல்வர் ஸ்டாலின் கவலைப்படுவது ஏன்? என  - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த காலத்தில் வெளியிடப்படாமல் தடை பட்டதற்கு காரணம், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட முடிவே. அதே போன்று விஜய்யை அரசியல் ரீதியாக, தவறாக இயக்கி வரும் சிலரின் சுயநல தேர்தல் அரசியலும் காரணம்.

இந்த உண்மையை அறிந்த, ‘ஜனநாயகன்’ படத்தின் கதாநாயகன் விஜய் மிகுந்த தெளிவுடன் கருத்து சொல்லாமல் அமைதியாக இருக்கும் பொழுது, மற்றவர்கள், தமிழக வாக்காளர்களை குழப்புவதற்காக, மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொல்வது கண்டனத்துக்குரியது.

அதேபோல், தேர்தல் வாக்குறுதி நடிகர் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுப்பது போல் உண்மைகளை மறைத்து , திமுக காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சியினர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்படத் துறையினரை தூண்டிவிட்டு உள்நோக்கத்துடன் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை, வேண்டுமென்று தடுப்பது போல, திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை செய்து வருவது நியாயமா?

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம், இத்திரைப்படத்தை பெரும் வணிகத்தை திட்டமிட்டு ஐயாயிரத்திற்கு மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டு, பெரும் லாபத்தை அடைவதற்காக, சென்சார் போர்டு சட்டத்திற்கு எதிரான முறையில் படம் ஆக்கப்பட்டுள்ள, சில சர்ச்சைக்குரிய காட்சிகளை வேண்டுமென்று நீக்க மறுத்ததன் காரணமாகவே, தற்போது திரைப்படம் வெளியிடப்படாத சூழ்நிலையில் உள்ளது.

‘ஜனநாயகன்’ படம் சென்சார் சட்ட விதிகளின்படி பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய U/A சர்டிபிகேட் வழங்கப்படுவதற்கு தகுதியற்ற திரைப்படம் என்று கருதப்படுவதால் சென்சார் சர்டிபிகேட், குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதியாக கூறிவிட்டது.

சென்சார் சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட சில காட்சிகள், குழந்தைகள் குடும்பத்துடன் பார்ப்பதற்கு தகுதியற்ற வகையிலும், சென்சார் சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட சில காட்சிகளும் வசனங்களும் ஏற்புடையதாக இல்லாததால், சென்சார் போர்டு உறுப்பினர்களின் கருத்துப்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளிக்காததால் தற்பொழுது உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்குகளின் அடிப்படையில் திரைப்படம் வெளியிட முடியவில்லை.

தற்போது உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தை ஜனநாயகன் திரைப்பட குழு அணுகி தீர்வை பெற்றுக்கொள்ள வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இதில் மத்திய அரசின் தலையீடும் இல்லை. பாஜக அரசியல் மற்றும் சென்சார் போர்டின் எந்தவித குறுக்கீடும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எனவே ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனதற்கான, காரணத்தின் உண்மையை உணர்ந்த நடிகர் விஜய், மிகப் பொறுமையாக அமைதியாக இருப்பது போல, தமிழக முதல்வரும் திமுகவின் கூட்டணி கட்சியினரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் காட்டும் ஆர்வத்தை சற்று நிறுத்தி, தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் படி பாஜக கேட்டுக்கொள்கிறது.

பள்ளி சுவர் இடிந்து விழுந்து பட்டியலின மாணவ சிறுவன் பலி, திருவள்ளூரில் சுகாதாரமற்ற குடிதண்ணீர் குடித்து விவசாயி பலி, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் படுகொலை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என ஒவ்வொரு நாளும் போராட்டம் என தமிழகமே போர்க்களமாக மாறி, காவல்துறையின் அடக்குமுறை ஆட்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது, அதைப்பற்றி தமிழக எதிர்க்கட்சிகள் ஏன் கவலைப்படவில்லை?

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பற்றி கவலைப்படுவதை விட தமிழக ஜனங்களைப் பற்றி திமுக, காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் கட்சிகள் கவலைப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN BJP Jananayagan issue DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->