உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் தளம் மற்றும் அதன் ஏஐ கருவியான குரோக்..! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் எக்ஸ் தளம் மற்றும் அதன் ஏஐ கருவியான குரோக் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறால் முடங்கியதால் பயனர்கள் தங்கள் கணக்குகளை அணுக முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இந்திய நேரப்படி இரவு 8:30 மணியளவில் எக்ஸ் தளம் மற்றும் குரோக் ஏஐ சேவைகள் முடங்கத் தொடங்கின. இது குறித்து,  டவுன்டெக்டர் இணையதளம், அமெரிக்காவில் மட்டும் சுமார் 75,000-க்கும் மேற்பட்டோர் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்கள் கணக்குகளை அணுக முடியாமல் தவித்துள்ளனர். குறிப்பாக, எக்ஸ் தளத்தைப் பயன்படுத்த முயன்றவர்களுக்கு பதிவுகளும், பின்னூட்டனஙகளும் சரியாக செயல்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

எக்ஸ் தளத்தின் பிரீமியம் பயனர்களுக்கு வழங்கப்படும் குரோக் ஏஐ சேவையும் இந்த முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த செவ்வாய்க்கிழமை எக்ஸ் தளம் ஒரு சிறிய முடக்கத்தைச் சந்தித்தது. நான்கு நாட்களில் நடைபெறும் இரண்டாவது பெரிய தொழில்நுட்பக் கோளாறு இதுவாகும். பல பயனர்கள் கிளவுட்ஃபிளேர் போன்ற இணைய உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

ஆனால், தற்போது வரை எக்ஸ் நிறுவனம் அல்லது எலான் மஸ்க் தரப்பில் இருந்து இந்த முடக்கம் குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது (இரவு 10 மணிக்குப் பிறகு?) சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன. இத்தகைய தொடர்ச்சியான முடக்கங்கள், எக்ஸ் தளத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளைப் பயனர்களிடையே எழுப்பியுள்ளது.

ஏற்கெனவே, எக்ஸ் தளத்தில் பெண்களின் புகைப்படங்களை அவர்களது அனுமதியின்றி மார்ஃப் செய்வதாக க்ரோக் ஏஐ மீது உலகம் முழுவதும் புகார் எழுந்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.  இந்த சூழலில், இப்படியான தொடர் தொழில்நுட்ப கோளாறுகளும் பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The X platform and its AI tool Grok suddenly crashed worldwide


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->