செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம்..!
The Supreme Court has adjourned the hearing of the case against Senthil Balaji
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ''இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞரை மாற்றி விட்டு புதிய பெயரை பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், முன்னதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நாங்கள் பரிந்துரை கொடுத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இந்த வழக்கை தாமதப்படுத்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் எங்களது தரப்பின் முக்கிய கோரிக்கை என்னவென்றால், குற்றம் புரிந்த, அதற்கு உடந்தையாக இருந்தவர்களை மட்டும் முதலில் பிரதானமாக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதோடு, அப்போது தான் வழக்கில் தீர்வு விரைவாக முடியும் என குறிப்பிட்டு இருந்தார்.
அடுத்ததாக, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ; இந்த வழக்கில் வாதிட்டு வந்த மூத்த வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தினால் வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும், இதுகுறித்த கடிதம் முன்னதாகவே உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய நிலையில், குறித்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
The Supreme Court has adjourned the hearing of the case against Senthil Balaji