என்டிஏ கூட்டணி அறிவிப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்; மதுராங்கத்தில் களஆய்வு செய்த இணையமைச்சர் எல்.முருகன்..!
Prime Minister Narendra Modi is participating in the NDA alliance announcement meeting
வரும் 23-ஆம் தேதி அன்று என்டிஏ கூட்டணிஅறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஹைவே-இன் ஹோட்டல் எதிரில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த கூட்டத்திற்காக 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தை சீரமைக்கும் பணி, மேடை அமைப்பதற்கான இடம் தேர்வு, வாகனம் நிறுத்துமிடம், ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று காலை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக நிர்வாகிகளுடன் ஹெலிகாப்டர் இறக்கு தளம், மேடை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, கட்சியினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், எதிர்பார்த்ததைவிட கூட்டணி கட்சியினர் அதிகளவில் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026-இல் தூய்மையான, நேர்மையான, வளர்ச்சிமிக்க கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆய்வின்போது, மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன்குமார், மாநில பிரிவுகளின் அமைப்பாளர் கே.டி.ராகவன், மாநில செயலாளர் வினோத் செல்வம், முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி, மதுராந்தகம் தொகுதி அமைப்பாளர் தினகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Prime Minister Narendra Modi is participating in the NDA alliance announcement meeting