களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு; 16 காளைகளை அடக்கிய இருவர் முதலிடம்; குலுக்கள் முறையில் காரை பரிசாக பெற்ற பொந்துகம்பட்டி அஜித்..!
In the Palamedu Jallikattu event Ponthukampatti Ajith tamed 16 bulls and won a car as a prize
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நிறைவடைந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 870 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், 461 வீரர்கள் களமிறங்கினர். பாலமேட்டு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
நேற்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறுவைடைந்தது.
இந்த காலை அடக்கும் போட்டியில், வலையாங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், 22 காளைகளை அடக்கி அசத்தியுள்ளார். இவருக்கு கார் பரிசாக கொடுக்கப்பட்டது. நாளை எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இன்று விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் பொந்துகம்பட்டி அஜித், பொதும்பு பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளனர். குலுக்கல் முறையில் அஜித் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் இதுவரை 04 முறை கார் வென்ற பிரபாகரன் 05வது முறை காரை வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை தழுவிய பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 02ஆம் இடம் பிடித்த பொதும்பு பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்தி 11 காளைகளை பிடித்து 03 வது இடத்தை பிடித்தார். குலமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
English Summary
In the Palamedu Jallikattu event Ponthukampatti Ajith tamed 16 bulls and won a car as a prize