பாலிவுட்டில் சாய் பல்லவி அதிரடி என்ட்ரி...! - ‘ஏக் தின்’ போஸ்டர் வெளியீடு...!
Sai Pallavi sensational entry into Bollywood Ek Din poster released
இயல்பான நடிப்பு, அர்த்தமுள்ள கதைத்தேர்வு, ரசிகர்களின் நம்பிக்கை – இந்த மூன்றின் அடையாளமாக தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்தியவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம், அமரன், ஷ்யாம் சிங்கா ராய், பிடா போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தனித்துவமான நடிகையாக உயர்ந்த அவர், கமர்ஷியல் சினிமாவை விட கதையின் ஆழத்தையே முதன்மை எனக் கருதும் நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்தி திரையுலகின் கதவுகள் சாய் பல்லவிக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான் தயாரிப்பில் உருவாகும் ‘ஏக் தின்’ திரைப்படத்தின் மூலம் அவர் இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார். சுனில் பாண்டே இயக்கும் இப்படத்தில், ஆமிர் கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு ராம் சம்பத் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில், ‘ஏக் தின்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால், சாய் பல்லவி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்தப் படம் வரும் மே 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பே, பாலிவுட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ பாகம் 1 & 2 திரைப்படங்களில், ‘சீதா’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரசிகர்களின் பெருமை, இனி இந்தி திரையுலகிலும் தனிச்சுவடுப் பதிக்கத் தயாராகியுள்ளார் சாய் பல்லவி.
English Summary
Sai Pallavi sensational entry into Bollywood Ek Din poster released