டி20 போட்டியில் அதிக சதம்: விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய டேவிட் வார்னர்..!
David Warner has surpassed Virat Kohli by scoring the most centuries in T20 matches
பிக் பாஷ் டி20 லீக் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் சிட்னி தண்டர்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் 06 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தது. அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி 65 பந்தில் 110 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இது டேவிட் வார்னரின் டி20 கிரிக்கெட்டில் 10-வது சதமாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். விராட் கோலி இதுவரை 09 சதங்கள் அடித்துள்ளார்.
22 சதங்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாம் 11 சதங்களுடன் 02-வது இடத்தில் உள்ளார். 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தால் (42 பந்தில் 100) 17.2 ஓவரில் இலக்கை எட்டி, 05 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
English Summary
David Warner has surpassed Virat Kohli by scoring the most centuries in T20 matches