30 வருடத்திற்கு பின்னர் மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக; மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி..!
Prime Minister Modi has thanked the people of Maharashtra regarding the municipal election results
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (வியாழக்கிழமை|) நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜக 30 வருடத்திற்கு பிறகு மும்பை மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
புனே உள்ளிட்ட மாநகராட்சியிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பத்துவிட்டுள்ளதாவது;
"தேங்க் யூ மகாராஷ்டிரா. எங்களின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுக்கான தொலைநோக்குப் பார்வை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மாநிலத்தின் ஆற்றல்மிக்க மக்கள், மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற என்.டி.ஏ-வின் திட்டத்திற்கு தங்கள் ஆசிகளை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மக்களுக்கு எனது நன்றிகள். இது முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கும், இந்த மாநிலத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்கும் ஆன ஒரு வாக்கெடுப்பு ஆகும்"

மகாராஷ்டிரா முழுவதும் மக்களிடையே அயராது உழைத்த ஒவ்வொரு என்.டி.ஏ. தொண்டரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் நமது கூட்டணியின் சாதனைகளைப் பற்றிப் பேசினார்கள், வரும் காலங்களுக்கான நமது தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார்கள், மேலும் எதிர்க்கட்சிகளின் பொய்களையும் திறம்பட முறியடித்தார்கள். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Modi has thanked the people of Maharashtra regarding the municipal election results