திரு.கன்ஷ்யாம் தாஸ் பிர்லா அவர்கள் நினைவு தினம்!.
Mr Kanshyam Das Birlas memorial day
இந்தியத் தொழில்துறையின் முக்கியத் தூண்களில் ஒருவரும், பிர்லா சாம்ராஜ்யத்துக்கு அஸ்திவாரம் இட்டவருமான திரு.கன்ஷ்யாம் தாஸ் பிர்லா அவர்கள் நினைவு தினம்!.
ஜி. டி. பிர்லா என்று அறியப்படும் கன்சியாம் தாஸ் பிர்லா (Ghanshyam Das Birla- G.D. Birla) (1894 ஏப்ரல் 10 - 1983 ஜூன் 11) இந்தியத் தொழில்துறையின் முக்கியத் தூண்களில் ஒருவரும், பிர்லா சாம்ராச்சியத்துக்கு அத்திவாரம் இட்டவர்.
பிர்லா இந்திய விடுதலை இயக்கத்தின் பெரும் ஆதரவாளராக விளங் கினார். அதற்கான நிதி உதவியை வழங்கினார். பொருளாதார விஷயங் களில் காந்தியடிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கிவந்தார்.
ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தைத் தொடங்கினார். 1964-ல் பிலானியில் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைத் தொடங்கினார். இந்நிறுவனம் பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தொடங்கி இலவசமாகக் கல்வி வழங்கியது.

1957-ல் பத்ம விபூஷண் விருது கிடைத்தது. தன் சுய முயற்சியால் மகத்தான சாதனைகளை செய்து இந்தியாவின் தொழில் துறையை முன்னேறச் செய்த ஜி.டி.பிர்லா என்று அறியப்படும் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா 1983-ம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி அன்றூ 89-வது வயதில் காலமானார்.
English Summary
Mr Kanshyam Das Birlas memorial day