திகைப்பு! சுவைமிகு சிறுவாணி குடிநீர் திட்டம் பார்த்து வியந்தோம்...! - ம.சுப்பிரமணியன்
Shocked We were amazed by the delicious Siruvani drinking water project M Subramanian
மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள், கோவை மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக காவலர்களுடன் சென்றார்.

இந்த ஆய்வு குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது," இன்று அதிகாலை கோவை மாவட்ட மலைக்கிராம மக்களின் மருத்துவ கட்டமைப்பை ஆய்வு செய்ய நடையும் ஓட்டமுமாக,கொட்டும் மழையில் 15 கிமீ சென்று கோவையின் குடிநீர் ஆதாரகளில் ஒன்றான “சுவைமிகு சிறுவாணி குடிநீர் திட்டத்தை”பார்த்து வியந்தோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தின் சிறப்புகளை எப்படி பாராட்டுவது என்றே தெரியாமல் திகைத்துப்போனோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Shocked We were amazed by the delicious Siruvani drinking water project M Subramanian