எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க தயார் - துணை முதலவர் உதயநிதி பேட்டி!
Monsoon Rain Deputy CM udhayanidhi stalin chennai
வடசென்னையில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் கே.என். நேருவும் நானும் இணைந்து வடசென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தோம்.
இந்தப் பகுதியில் மொத்தம் 18 கால்வாய்கள் மற்றும் 13 குளங்கள் சென்னை மாநகராட்சியால் தூர்வாரப்பட்டுள்ளன. மொத்தம் 331 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டு, சுமார் மூன்றரை லட்சம் டன் அளவிலான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், சமூக ஊடகங்களில் குடிமக்களிடமிருந்து வரும் புகார்களை உடனடியாக கவனிக்க முதல்வர் நேரடியாக அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி குளம், கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகிய பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டோம்.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, அடுத்த 10 நாட்களுக்கு பெரிய அளவிலான மழை ஏற்படும் வாய்ப்பு இல்லை. எனினும், எந்த அளவுக்குத் திடீர் மழை பெய்தாலும், அதனை திறம்பட சமாளிக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
English Summary
Monsoon Rain Deputy CM udhayanidhi stalin chennai