சீமானின் வாயே அவருக்கு எதிரி! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சுக்கு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஊடகவியலாளரின் குடும்பப் பெண்கள் குறித்துத் தரக்குறைவாக சீமான் பேசியதற்கு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்ததை தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள் அது தொடர்பாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது.

அந்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய சீமான் மிகவும் தரம் தாழ்ந்து செயல்படுவது தெரிகிறது.

ஒரு ஊடகவியாளர் மீது அவருக்கு விமர்சனம் இருக்குமானால் அவரை நோக்கி விமர்சனம் வைக்க வேண்டுமே தவிர,அவர்களின் குடும்பங்களை இழுத்து பேசுவது கண்டிக்கதக்கது. சீமானின் வாயே அவருக்கு எதிரி" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mohamed Shibli condemn to Seeman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->