வருகிற தேர்தலில் திமுகவிற்கு வெறும் 13 சீட்டு தான் வரும் - எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா பரபரப்பு பேச்சு.!
MLA v v rajan chellappa speech in madurai
விட்டால் தமிழ்நாட்டுக்கு கூட கருணாநிதி என்று பெயர் வைத்து விடுவார். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வு முகாமில் அதிமுக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வு முகாமை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமையில் மாவட்ட செயலாளரும், அதிமுக அமைப்பு செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது இந்த முகாமில் பேசிய வி.வி.ராஜன் செல்லப்பா, ‘‘தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கருணாநிதி பெயர் வைக்கும் விழாவை மட்டுமே நடத்தி வருகிறார். மக்களைப் பற்றி அவர் கொஞ்சம் கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. விட்டால் தமிழ்நாட்டுக்கு கூட கருணாநிதி என்று பெயர் வைத்து விடுவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரைக்கும் பதில் சொல்லவில்லை.

சமீபத்தில் பீகார் சென்ற ஸ்டாலின் நிதிஷ்குமார் அளித்த விருந்தில் பங்கேற்கவில்லை. அதற்கு காரணம், கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க நிதிஷ்குமார் வரவில்லை என்ற ஆதங்கம் தான்.
மதுரை மாநகராட்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த துணை மேயரும் மதுரை மாநகராட்சியின் குளறுபடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டை தெரிவித்து விட்டனர்.
வருகிற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அதிகளவில் சீட்டுகளை எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலைமை நீடித்தால் திமுகவிற்கு வெறும் 13 சீட்டு தான் வரும். தற்போது திமுகவில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதால் கூட்டணி கட்சிகள் உடையும் அபாயம் உள்ளது. அதனால் திமுக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என்ற சூழ்நிலை உள்ளது" இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
English Summary
MLA v v rajan chellappa speech in madurai