அரியூர் ஷீரடி பாபா ஆலயத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு! - Seithipunal
Seithipunal


அரியூர் ஷீரடி  ஸ்ரீ அக்ஷய பாபா ஆலயத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  சாமி வழிபாடு செய்து  சென்றனர்.

வேலூர் மாவட்டம் அரியூர். கார்த்திக் நகரில் அருள்மிகு ஷீரடி ஸ்ரீ அக்ஷய பாபா ஆலயத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்  நடைபெற்றது இதில் அருள் பாவித்து பக்தர்களின் குறைகளை நீக்கி ஜஸ்வர்யத்தை அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அக்ஷ்ய பாபாவின் துணைக் கொண்டு   துவதியை திதி. புனர்பூசம் நட்சத்திரம். அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள் துலாம்லக்னத்தில்குருஹோரையில் ஸ்ரீ சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது

இந்த ஹோமம் பலன்,சுயம்வர பார்வதி ஹோமம் என்பது சகல வசதிகள். அம்சங்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ ஜாதக குறைபாடுகள். தோஷங்கள். கிரக நிலை குறைபாடுகள். பித்ரு தோஷங்கள். குலதெய்வ வழிபாட்டை மறந்துபோனது போன்ற பல காரணங்களால் திருமணம் தடைபடுவது உண்டு. இதை சரி செய்து திருமண வரத்தைப் பெற நமது சாஸ்திரங்கள்பலஉபாயங்களையும் கூறுகின்றன. 

அதில் சிறப்பானது சுயம்வர பார்வதி ஹோமம்.இது அன்னை பார்வதி ஈசனை அடைய செய்த வழிபாடு என்றும். இந்த மூல மந்திரங்களை பிரம்மன் உபதேசிக்க, வசிஷ்டரால் ஹோமத்தில் உச்சாடனம் செய்யப்பட்டது என்றும் கூறுவார்கள். கணபதி தொடங்கி வருணன். அஷ்ட திக் பாலகர்கள்.பஞ்ச சாக்குன்ய தேவதைகள். சுயம்வர பார்வதி என பலதெய்வங்களைஆவாஹனப்படுத்தி செய்யும் அற்புத வழிபாடு இது. இந்த வழிபட்டால் உங்கள் பித்ருக்களும். குலதெய்வமும் மகிழ்ந்து உங்களுக்கு திருமண வரத்தை அளிக்கும் என்று நம்பப்படுகின்றது இதில் 150 க்கும் மேற்பட்ட கலந்துகொண்டு சாமி வழிபாடு செய்து  சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

At the Ariyur Shirdi Baba Temple, a self-selection Parvati Homam takes place A large number of devotees are worshipping


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->