ஒரே நாளில் சரிந்த தக்காளி விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!!
tomato price decrease
சென்னை கோயம்பேட்டில் இயங்கிவரும் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் லாரிகளில் வந்து இறங்குகின்றன. இந்த மார்க்கெட்டிலிருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.
அப்படி விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை அதன் வரத்தை பொறுத்து நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதன்படி ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. மொத்த விலையில் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனைக் கடைகளில் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது.