ஈரோட்டில் கத்தி முனையில் சிறுமிக்கு பாலியல் சீண்டல்: சரித்திர பதிவேடு குற்றவாளியின் வெறிச்செயல்..!
Man arrested for sexually assaulting girl at knifepoint in Erode
ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமியிடம் இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியட்டால் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாவார். இவர் மீது 25-க்கும் மேற்பட்ட அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் 13 வயது சிறுமியிடம், அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட தமிழ்ச்செல்வன் வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதோடு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
-edev3.png)
சிறுமியின் பெற்றோர் வீடு திரும்பிய போது தனக்கு நடந்த கொடூரத்தை சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்களின் புகாரின் பேரில் போலீசார் தமிழ்ச்செல்வனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர், சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தமிழ்ச்செல்வனை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை ஈரோடு கிளை சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Man arrested for sexually assaulting girl at knifepoint in Erode