செங்கோட்டையன் பின் அவரது அணியினருக்கும் கதவுகள் மூடப்பட்டன...! -எடப்பாடி அதிரடி உத்தரவு...!
After Sengottaiyan doors closed his team Edappadi orders action
அதிமுக அரசியலில் அசாதாரண திருப்பம் நிகழ்ந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவரும், கோபிச்செட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் அதிமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், உணர்ச்சி வசப்பட்டு,“நான் 52 ஆண்டுகளாக அதிமுகவுக்காக உயிரை அர்ப்பணித்துள்ளேன்.

தொண்டர்களின் உணர்வை மட்டுமே வெளிப்படுத்தினேன். ஆனால் என்மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தி நீக்கம் செய்தது மிகுந்த வேதனையளிக்கிறது"என்று தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (எடப்பாடி பழனிசாமி) கடுமையாகக் கண்டனம் தெரிவித்து,“அதிமுகவை பலவீனப்படுத்த முயன்றால், அமைதியாகப் பார்ப்பது எங்களால் முடியாது"என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
செங்கோட்டையன் நீக்கம் சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத் தொடர்ந்து கட்சியில் நிகழ்ந்த முக்கிய விலக்கல் நடவடிக்கையாக கருதப்படுகிறது.இந்நிலையில், செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்த 12 முக்கிய நிர்வாகிகள் மீதும் அதிமுக உயர் கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா,
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன்,
நம்பியூர் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம்,
கோபி மேற்கு ஒன்றிய நிர்வாகி குறிஞ்சிநாதன்,
முன்னாள் ஒன்றியத் தலைவர்கள் மவுதீஸ்வரன் மற்றும் பி.யூ. முத்துசாமி,
அத்தாணி பேரூர் கழக செயலாளர் எஸ்.எஸ். ரமேஷ் உள்ளிட்டோர்
அனைத்து பதவிகளிலிருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.இந்த திடீர் முடிவு, ஈரோடு–கோபி பிராந்திய அதிமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கட்சிக்குள் மீண்டும் பிரிவினை உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்கள் தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன.
English Summary
After Sengottaiyan doors closed his team Edappadi orders action