சோகம்.. சளி மருந்து குடித்து 16 மாத குழந்தை பலி..!!
children died for drink cold syrub in dindukal
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே சி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சின்னபாண்டி-பானுப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு பிரணித் என்ற குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு கடந்த 26-ந்தேதி சளி பிடித்திருந்தது.
இதனால் பெற்றோர் அப்பகுதியில் உள்ள கடையில் சளி மருந்து வாங்கி கொடுத்து தூங்க வைத்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு குழந்தைக்கு கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பிரணித்தை சிகிச்சைக்காக வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சளி மருந்து குடித்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
children died for drink cold syrub in dindukal