மகளிருக்கு அடித்த ஜாக்பாட்.! ரூ.15,000 கோடி சுழல் நிதி.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மத்திய அரசு திட்டங்களை மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தான ஊரக வளர்ச்சித் துறையின் திசா குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கும் நிதியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.15,000 கோடி சுழல் நிதி கடன் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 25,000 கோடி கடன் வழங்கியுள்ளதாக எனத் தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின் 10,000 சுய உதவி குழுவினருக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ள 15,000 கோடி சூழல் நிதி விரைவில் மகளிர் குழுவினருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் உச்ச வரம்பு உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MKStalin announced 15000 crore rotation fund provide women self help groups


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->