வேளாண் துறை என்ற பெயரை மாற்றியது திமுக அரசு - தமிழக முதல்வர் ஸ்டாலின்.!!
mk stalin says dmk agriculture department name
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர், உழவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து இந்த விழாவில் அவர் பேசியதாவது:- "தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. வேளாண்மையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்று சொல்லுமளவுக்கான விழா இது.

விவசாயிகளுக்கு வேளாண் வணிக வாய்ப்புகளை தெரிந்து கொள்ளும் தளமாக உள்ளது.
விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். வேளாண் அதிகரிப்பதுடன் உழவர்களின் வாழ்வும் உயர வேண்டும்.
வேளாண் துறை என்ற பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றி அறிவித்தது தி.மு.க. அரசு. உழவர்களின் கருத்து, விருப்பத்தை கேட்டு செயல்படும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
mk stalin says dmk agriculture department name