டிரம்ப் இல்லை… பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே தாக்குதல் நிறுத்தினோம்!- ஐ.நா.வில் இந்தியா அதிரடி
No Trump We stopped attack only because Pakistan begged India takes action UN
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், “இந்தியா-பாகிஸ்தான் போரை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது” எனத் தெரிவித்தார். மேலும் இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், காஷ்மீர் பிரச்சனை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றையும் முன்வைத்தார்.

இதற்கு இந்தியாவின் நிரந்தர தூதர் பெட்டல் கஹ்லோட் கடும் பதிலடி கொடுத்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"பாகிஸ்தான் ஐ.நா. சபையில் அபத்தமான நாடகம் ஆடியுள்ளது.
பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தும் அந்த நாடு, ஒசாமா பின் லாடனுக்கே அடைக்கலம் கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் போக்கில் தாக்குதல் நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது.
எங்கள் படைகள் பல பாகிஸ்தான் தளங்களை அழித்தன. எந்த மூன்றாம் தரப்பினருக்கும் எங்கள் விவகாரத்தில் இடமில்லை. அணு அச்சுறுத்தலின் பெயரில் பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகிக்காது” என்று அவர் எச்சரித்தார்.
இது தற்போது இந்திய முழுவதும் பேசப்படும் ஒரு முக்கிய விஷயமாக மாறியுள்ளது.
English Summary
No Trump We stopped attack only because Pakistan begged India takes action UN