பத்து நிமிடத்தில் பன்னீர் பாப்கார்ன் செய்வது எப்படி?
how to make paneer popcorn
தேவையான பொருட்கள்:-
பன்னீர், கான்ஃப்ளக்ஸ், மைதா மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சில்லி சாஸ், மிளகுத்தூள், உப்பு, பூண்டு, வெங்காயம்.
செய்முறை:-
முதலில் வெங்காயத்தை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி மைதா மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சில்லி சாஸ், மிளகுத்தூள், உப்பு, பூண்டு, அரைத்து வைத்துள்ள வெங்காயம் அனைத்தையும் சேர்த்து கலந்து பின்னர் பன்னீரை பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள பன்னீரை போட்டு பொரித்து எடுத்தால் சூடான பன்னீர் பாப்கான் தயார்.
English Summary
how to make paneer popcorn