காசாவில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்!- 32 பேர் பரிதாப பலி
isreal airstrike Gaza 32 people tragically killed
காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதலை நடத்தியது. அந்த அசுரத்தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, 251 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பை வேரோடு ஒழிக்கவேண்டும் என்ற உறுதியுடன், இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக போருக்குத் துவக்கமிட்டது. அதிலிருந்து தொடங்கி, காசா நிலம் தொடர்ந்து ராணுவத் தாக்குதலால் சிதைந்துகொண்டே வருகிறது. ஹமாஸை முற்றிலுமாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் இருக்காது என்று தெளிவாக எச்சரிக்கை விடுத்துள்ளது இஸ்ரேல்.
இந்நிலையில், ஹமாஸ் கைப்பற்றியிருந்த பணயக் கைதிகளில் சிலரை, ஒப்பந்தங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் இஸ்ரேல் மீட்டுள்ளது. ஆனால் அதே சமயம், காசா முழுவதும் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இதுவரை 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்; லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகள், வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்து அகதிகளாக அலைந்துவருகின்றனர்.
உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலை தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்திக்கொண்டிருக்க, அதற்கு மாறாக தாக்குதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இன்று அதிகாலை, மத்திய மற்றும் வடக்கு காசா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
அதில் ஒன்பது பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கொடூரமான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ஐ.நா. சபையில் நேற்று உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஹமாஸுக்கு எதிரான இந்த போராட்டத்தை எந்நிலையிலும் நிறுத்தமாட்டோம். அதை முடித்து தீர்ப்போம்” என்று வலியுறுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
English Summary
isreal airstrike Gaza 32 people tragically killed