நிதியுதவி நிறுத்த விவகாரம் ; டிரம்ப்பின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சொன்ன பதில்! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் தொடர்பான டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

 வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ பயன்பாடு, தடுப்பூசி, நலத்திட்ட பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி அளித்து வந்தது. 

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வெளிநாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். அதன்படி 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்  வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கான நிதியுதவியை டிரம்ப் நிறுத்தியதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நிதியுதவியை நிறுத்தி ஜனாதிபதி பதவியை அதிகாரத்தை டிரம்ப் தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது . இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வெளிநாடுகளுக்கான நிதியுதவியான 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை நிறுத்திவைத்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு டிரம்ப் நிர்வாகத்திற்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது என்று சொல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Issue of stopping financial aid Supreme Courts response to Trumps order


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->