ரஜினியும் நானும் கண்டிப்பாக மீண்டும் இணைந்து நடிப்போம்...!-கமல்ஹாசன் உறுதி
Rajinikanth and I will definitely act together again Kamal Haasan confirms
சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்ததாவது,"தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத் திட்டங்களைப் போல், தெலுங்கானாவில் அவற்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருப்பது பாராட்டத்தக்க ஒன்று.

தமிழ்நாடு இதை ஏற்கனவே பல ஆண்டுகளாக முன்னோடியாக செய்து வருகிறது. ‘அன்ன கொடி’ ஒருகாலத்தில் பறந்து உலகம் முழுதும் கவனம் பெற்றது. அதை மீண்டும் பறக்க விடுவதில் நான் பெருமை அடைகிறேன்.
இந்த முயற்சியை மற்ற மாநிலங்களும் பின்பற்றுவது தமிழ்நாட்டுக்கே ஒரு பெருமை” எனக் குறிப்பிட்டார்.அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பது உண்மையா ...? என்ற கேள்விக்கு,“ரஜினியும் நானும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளோம்.
எதிர்காலத்தில் நிச்சயம் மீண்டும் ஒன்றாக திரையில் தோன்றுவோம். ரஜினியுடன் நடிப்பது குறித்து எனக்கும் ஆவல் இருக்கிறது, அது நிச்சயம் நடக்கும்” என்று கமல்ஹாசன் உறுதியளித்தார்.
English Summary
Rajinikanth and I will definitely act together again Kamal Haasan confirms