கொள்ளு புட்டு செய்வது எப்படி?
how to make kollu puttu
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி மாவு, கொள்ளு, தேங்காய் துருவல், நெய், முந்திரி, பாதாம், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், கடுகு, எண்ணெய், கருவேப்பிலை, பச்சை மிளகாய்.
செய்முறை:-
கொள்ளை சுத்தப்படுத்தி வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், அரிசி மாவை சூடு வர வறுத்து கொள்ளுடன் கலந்து உப்பு கரைத்த நீர் விட்டு பிசறி மூடி வைக்கவும்.
பத்து நிமிடத்திற்கு பின் மஞ்சள் தூள் கலந்து வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல், நெய், எலுமிச்சை சாறு, கலந்து கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து கொட்டி பாதாமை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் போட்டு வறுத்து தூவினால் சுவையான புட்டு ரெடி.