ஈவ்னிங் ஸ்னாக்ஸ் - ஜவ்வரிசி போண்டா..!!
javvarisi bonda
தேவையான பொருட்கள்:-
ஜவ்வரிசி, புளித்த தயிர், தண்ணீர், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு, அரிசி மாவு, இஞ்சி.
செய்முறை:-
ஜவ்வரிசியை ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தயிர், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, அரிசி மாவு, இஞ்சி உள்ளிட்ட அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்தால் அற்புதமான ஜவ்வரிசி போண்டா தயார்.