ஆஷா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.!!
asha movie first look poster released
தமிழ் சினிமாவில் பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் ஊர்வசி. இவரது நடிப்புக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார்.
இப்போது ஊர்வசி சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால், இவருக்கு 71வது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகை ஊர்வசி, சபர் சனல் இயக்கத்தில் "ஆஷா" என்ற திரைபடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
asha movie first look poster released