குழந்தைகளுக்கு ஏற்ற மினி ரவா இட்லி.!!
how to make mini rava idly
தேவையான பொருட்கள்:-
ரவா, தயிர், சேமியா, ஃப்ரூட்ஸ் சாலட், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் இஞ்சி விழுது, கடலைப்பருப்பு, உளுந்து, கடுகு, கொத்தமல்லி, உப்பு.
செய்முறை:-
முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்து பிறகு உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து ரவை சேர்த்து சிவக்க வறுத்து ஆற வைக்க வேண்டும். இதில் ஃப்ரூட் சாலட் இல்லாமல் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
பின்னர், இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடானதும் ரவை மாவில் ஃப்ரூட் சாலட் சேர்த்து அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு கலந்து மினி இட்லிகளாக சுட்டெடுக்கவும்.
English Summary
how to make mini rava idly