நீச்சல் குளத்தில் டால்பின் போல சுழன்ற வாமிகா கபி – பார்த்தா பஞ்சர் ஆகிடுவிங்க! - Seithipunal
Seithipunal


இந்திய திரையுலகில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை வாமிகா கபி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவால் இணையத்தை கவர்ந்துள்ளார். அவர் நீச்சல் குளத்தில் டால்பின் போல சுழன்று விளையாடிய வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

சிறுவயதிலேயே கலைத்துறைக்கு அடியெடுத்து வைத்த வாமிகா, 8 வயதில் பஞ்சாபி டிவி சீரியல் Saude Dillan De மூலம் நடிப்புலகில் அறிமுகமானார். அதன் பின்னர், 2007-ஆம் ஆண்டு ஹிந்தி சூப்பர்ஹிட் திரைப்படமான Jab We Met-இல் கரீனா கபூரின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் நடிகையாகத் திரையுலகில் முழுமையாக அறிமுகமான வாமிகா, பஞ்சாபி சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனக்கென பெயரைப் பெற்றார். அதற்காக பஞ்சாபி பிலிம் ஃபேர் விருதையும் வென்றார்.

பல மொழிகளை அறிந்த வாமிகா, தமிழில் இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவனின் மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். வெளியானபோது படம் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், பின்னர் அது ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விடலாம் என நினைத்த வாமிகா, தனது நெருங்கிய நண்பர்களின் ஊக்கத்தால் மீண்டும் சினிமாவில் தீவிரமாக ஈடுபட்டார். சமீபத்தில் அட்லீ தயாரித்த பேபி ஜான் படத்திலும் நடித்தார்.

தற்போது, லக்னோவில் நடைபெற்று வரும் தனது புதிய படப்பிடிப்பிலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில்,

படப்பிடிப்பு தளத்தில் ரிகர்சல் செய்வது,தனது சக நடிகருடன் எடுத்த செல்ஃபி,தனது அறையில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் தருணங்கள்,ஒரு சிலையின் புகைப்படம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

அவற்றில் மிகவும் கவனத்தை ஈர்த்தது, அவர் நீச்சல் குளத்தில் டால்பின் போல சுழன்று நீந்தும் வீடியோ ஆகும். அந்த வீடியோக்கு “லக்னோ ஸ்கெட்யூல் நிறைவடைந்தது” என்ற கேப்ஷன் இடப்பட்டுள்ளது.

வாமிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 5.7 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். ரசிகர்கள், அவர் மீண்டும் தமிழிலும் நடிக்க வேண்டும் என்று கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். வாமிகாவின் இந்த வைரல் வீடியோ, அவரது ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vamika Kapi spinning like a dolphin in the swimming pool if you see her youll get a puncture


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->