தியா சூர்யாவின் "லீடிங் லைட்": ஆஸ்கர் விருதுக்காக திரையிடப்பட்டுள்ளமைக்கு குவியும் பாராட்டு..!
Diya Suryas film Leading Light has been nominated for an Oscar
2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் "லீடிங் லைட்"
இந்த படத்தின் மூலம் சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இயக்குநராக களமிறங்கியுள்ளார். திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் லைட்வுமன்களில் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமாவாக இந்த படம் உருவாகியுள்ளது.
உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் "லீடிங் லைட்" படம் ஆஸ்கர் விருதுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படவுள்ளது.
இன்று செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 02 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இந்த படம் திரையிடப்படுகிறது. இயக்குநராக தியா சூர்யா அறிமுகத்திலையே ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருப்பதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Diya Suryas film Leading Light has been nominated for an Oscar