சொகுசு கார் பறிமுதல்: நடிகர் துல்கர் சல்மான் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!
Actor Dulquer Salmaan files case in Kerala High Court against confiscation of luxury car
பூட்டானில் இருந்து சட்ட விரோதமாக சொகுசு கார்களை இறக்குமதி சித்தமை தொடர்பாக தொடர்பாக சுங்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். குறித்த சோதனையில் கேரளாவில் 35 கார்களை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சோதனையின் முடிவில் துல்கர் சல்மானுக்கு சொந்தமான லேண்ட்கிருஷர் 2004 காரை பரிமுதல் செய்துள்ளதோடு, 'ஆப்ரேஷன் நுங்குற்' என்ற சோதனையில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சம்மந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், சொகுசு கார்களை பறிமுதல் செய்ததை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார். சுங்கத்துறை பதிலளிக்க அவகாசம் கொடுத்து வழக்கை செப்டம்பர் 30-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

முறையான ஆவணங்களை கொடுத்து கார்களை வாங்கியதாக துல்கர் சல்மான் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சுங்க வரி செலுத்திய ஆவணங்களை தந்த பின்பும் சுங்க அதிகாரிகள் கார்களை பறிமுதல் செய்தனர் என துல்கர் சல்மான் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நேற்றையதினம் சுங்க துறை அதிகாரிகளிடம் அணைத்து ஆவணங்களையும் கொடுத்து விளக்கம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுளளார். மேலும், ஆவணங்கள் தந்தும் சுங்க துறை அதிகாரிகள் தனது சொகுசு கார்களை விடுவிக்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Actor Dulquer Salmaan files case in Kerala High Court against confiscation of luxury car