'அரசியல் நாகரிகமற்ற செயல்: தமிழர்களுக்கே உரித்தான அறத்தை சீமான் கற்றுக்கொள்ள வேண்டும்': இபிஎஸ் கண்டனம்..!
EPS condemns Seeman saying he should learn the virtues that belong to Tamils
மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது துளியும் அரசியல் நாகரிகமற்ற செயல் என குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
'மேடைகளில் சமத்துவம் கண்ட, அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் சமதர்ம திராவிட அரசியலை தமிழ்நாட்டின் நிர்வாக அரசியலாகக் கட்டமைத்த பேரறிஞர் அண்ணா அவர்களையும் அண்ணா வழி திராவிடம் எனும் உயரிய நோக்கில் அதிமுக நிறுவி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பிற்குரிய தலைவராக, மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் தலைவராக விளங்கிய நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும், இழிசொல் உரைத்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கடும் கண்டனம்.
மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது துளியும் அரசியல் நாகரிகமற்ற செயல். தமிழர்களுக்கே உரித்தான அறத்தை சீமான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கொள்கையை, வளர்ச்சியை செதுக்கிய ஒப்பாரும் மிக்காரும் அற்ற நம் தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.'என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
EPS condemns Seeman saying he should learn the virtues that belong to Tamils