ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்று அசத்திய ஜோனாதன்..!
Jonathan impresses by winning gold at the Junior World Shooting Championships
டெல்லியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்' / 'ஷாட்கன்') தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் ஜோனாதன் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோனாதன் கவின் ஆண்டனி (586.19 புள்ளி), சிராக் சர்மா (578.15) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். இதில் ஜோனாதன், 244.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.

அத்துடன், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி (576.19 புள்ளி), மோஹினி சிங் (576.12), ராஷ்மிகா சாகல் (573.17) முறையே 01, 02, 05-வது இடம் பிடித்து இறுதி போட்டிக்கு நுழைந்தனர்.
இறுதி போட்டியில் அசத்திய ராஷ்மிகா, 236.1 புள்ளிகளுடன் 02-வது இடம் பிடித்து வெள்ளி வென்றுள்ளார். ரஷ்யாவின் எவெலினா ஷீனா (240.9) தங்கம் வென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான வன்ஷிகா (174.2), மோஹினி (153.7) முறையே 05, 06-வது இடம் பிடித்தனர்.
இதுவரை 02 தங்கம், 03 வெள்ளி, 02 வெண்கலம் என, 07 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, முதலிடத்தில் நீடிக்கிறது.
English Summary
Jonathan impresses by winning gold at the Junior World Shooting Championships