ஆசிய கோப்பை 2025 தொடரில் 'சூப்பர்-4' போட்டியில் இந்திய அணி, 'சூப்பர் ஓவரில்' வெற்றி பெற்றது. கடைசி வரை போராடி இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
முக்கியத்துவமில்லாத இந்த 'சூப்பர்-4' போட்டியில் இந்தியா, இலங்கை மோதின. இதில் இந்திய அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் பும்ரா, ஷிவம் துபேவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற்றனர்.
நடப்பு சாம்பியனான இலங்கை இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்த நிலையில், முதலில் 'டாஸ்' வென்று, 'பவுலிங்' தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே இலங்கை அணி அதிர்ச்சி கொடுத்தது. மகேஷ் தீக்ஷன வீசிய பந்தில் அவரிடமே 'கேட்ச்' கொடுத்தார் சுப்மன் கில் நான்கு ரன்களில் ஆட்டமிழந்தார். வழக்கம் போல அதிரடியாக ரன் சேர்த்த அபிஷேக், 22 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவர் அடித்த 03-வது அரைசதமாகும். அணியின் கேப்டன் சூர்யகுமார் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து அசலங்க வீசிய பந்தில் அபிஷேக் சர்மா 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 39 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 02 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா 49 ரன்கள், அக்சர் படேல் 21 ரன்கள் அணிக்கு கைகொடுத்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 202/5 ரன் எடுத்தது.
202 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு நிசங்கா, குசல் மெண்டிஸ் (0) ஜோடி தொடக்கம் இருந்தது. பின்னர் களமிறங்கிய நிசங்க, குசல் பெரேரா என இருவரும் அரைசதம் கடந்தனர். 11 ஓவரில் 130/1 ரன்கள் குவித்தது. அத்துடன், ஆசிய 'டி-20'-இல் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் எடுத்த ஜோடி (02-வது விக்கெட்டுக்கு 127 ரன்) ஆனது.

இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி சுழலில் குசல் பெரேரா 58 ரன்களில் ஸ்டம்டு ஆனார். அசலங்க (5), கமிந்து (3) நிலைக்கவில்லை. அடுத்து களமிறங்கிற பதும் நிசங்க, 52 பந்தில் சதம் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அக்சர் பந்தில் ஷானக ஒரு சிக்சர் அடிக்க, கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன.
இறுதியில், ஹர்ஷித் ராணா பந்து வீச்சில்,முதல் பந்தில் நிசங்க 107 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த 02 பந்தில் 03 ரன் கிடைத்தன. 04, 05-வது பந்தில் 02, 04 ரன் எடுத்த ஷானக (22), கடைசி பந்திலும் 02 ரன் எடுக்க, இலங்கை அணி 20 ஓவரில் 202/5 ரன் எடுத்தது. போட்டி சமநிலை ஆனது.
இதனையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் அர்ஷ்தீப் சிங் பந்து வீசியநிலையில், . முதல் பந்தில் பெரேரா (0) ஆட்டமிழந்தார். 04வது பந்து 'வைடு' கொடுக்கப்பட்டது. 05வது பந்தில் ஷானகா (0) ரன் அவுட்டானார். கமிந்து (1) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி, 0.5 ஓவரில் 02 ரன் மட்டும் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 0.1 ஓவரில் 03 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் (3), சுப்மன் அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆசிய கோப்பை ('டி-20') அரங்கில் இந்தியா, இலங்கை அணிகள் நேற்று இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை (202/5) பதிவு செய்த நிலையில்,முதலிடத்தில் இந்தியா (212/2, எதிர் ஆப்கானிஸ்தான் 2022, துபாய்) தான் உள்ளது.
ஒரு ஆசிய கோப்பை தொடரில் (டி-20) அதிக ரன் எடுத்தவரில் அபிஷேக் சர்மா முதலிடம் பெற்றுள்ளார். இதுவரை 06 இன்னிங்சில் 309 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இடங்களில் ரிஸ்வான் (பாகிஸ்தான் 281 ரன்கள், 06 இன்னிங்ஸ், 2022), கோலி (இந்தியா, 276 ரன், 05 இன்னிங்ஸ், 2022) உள்ளனர்.
ஒரு டி-20 தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களில் (ஐ.சி.சி., முழு அந்தஸ்து பெற்ற அணிகள்) வரிசையில் அபிஷேக் 05-வது இடம் பிடித்துள்ளார். இம்முறை ஆசிய கோப்பை தொடரில் 309 ரன் (06 இன்னிங்ஸ் எடுத்துள்ளார்.

முதல் நான்கு இடங்களில் உள்ளவர்கள்:
02- பில் சால்ட்(இங்கி., 331 ரன், 05 இன்னிங்ஸ், எதிர், வெ.இ., 2023), 03- கோலி (319 ரன், 6 இன்னிங்ஸ், 'டி-20' உலக கோப்பை, 2014), 04- தில்ஷன் (இலங்கை, 317 ரன், 07 இன்னிங்ஸ், டி-20 உலக கோப்பை, 2009),
05- ரிஸ்வான் (பாக்., 316 ரன், 06 இன்னிங்ஸ், எதிர், இங்கி., 2022) உள்ளனர்.
22 பந்தில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா, சர்வதேச டி-20 அரங்கில் 50 ரன்களை 25 பந்துகளுக்கு குறைவாக அதிக முறை எடுத்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை (தலா 06 முறை) ரோகித் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் சூர்யகுமார் (07) உள்ளார்.
சர்வதேச டி-20 அரங்கில் தொடர்ந்து 30+ ரன் எடுத்தவர்களில் முதலிடத்தை ரிஸ்வான், ரோகித் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார். மூவரும் 07 முறை 30+ ரன்களை எடுத்துள்ளனர்.
சர்வதேச 'டி-20' அரங்கில் தொடர்ந்து 03 அரைசதம் அடித்த 06-வது இந்திய வீரரானார் அபிஷேக் (1). இதற்கு முன் கோலி (03 முறை), ராகுல் (02), சூர்யகுமார் (02), ரோகித் (01), ஷ்ரேயஸ் (01) அசத்தினர்.