சமந்தாவிற்கு விரைவில் டும் டும் டும்..இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சமந்தா? யார் மாப்பிளை தெரியுமா?
Samantha is getting married soon has Samantha confirmed her second marriage Do you know who the groom is
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, தனது தனிப்பட்ட வாழ்க்கையால் மீண்டும் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.
சமந்தா, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. குடும்ப எதிர்ப்புகளை மீறி, இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததால், இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழத் தொடங்கினர்.
விவாகரத்திற்குப் பிறகு, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து, இரண்டாவது திருமணத்தில் இணைந்தார். இதே நேரத்தில், சமந்தா தனது நடிப்பைத் தொடர்ந்து, மையோசிடிஸ் நோயால் சிகிச்சை பெற்று, மீண்டும் திரையுலகிற்கு திரும்பினார். அவர் நடித்த ‘குஷி’ மற்றும் ‘சாகுந்தலம்’ படங்கள் வசூலில் வெற்றி பெறாதபோதிலும், ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த சீரிஸை இயக்கிய ராஜ் & டிகே ஜோடியில், இயக்குனர் ராஜுடன் சமந்தா நெருக்கமாக பழகிவருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், ராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, “புதிய தொடக்கம்” என்ற கேப்ஷனுடன் சமந்தா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், இவர்களுக்கிடையேயான காதல் உறவு உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் ஊகிக்கிறார்கள்.
திரையுலக வட்டாரங்கள் கூறுவதாவது, இருவரும் வெளிநாட்டு பயணங்களில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர், மேலும் விரைவில் திருமண பந்தத்தில் இணைவார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனது கடந்த கால அனுபவங்களைத் தாண்டி, புதிய வாழ்க்கையைத் தொடங்கத் தயாராக உள்ளார் என ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
English Summary
Samantha is getting married soon has Samantha confirmed her second marriage Do you know who the groom is